அரியலூர், மார்ச் 18: அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்க்காவல் படையினர் 29 பேருக்கு கடந்த ஜனவரி 22 முதல் 45 நாட்கள் உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சி வழங்கப்பட்டன. பயிற்சி காலம் முடிந்து பணிக்கு செல்ல உள்ள நிலையில், அவர்களுக்கு நேற்று பயிற்சி நிறைவு விழா அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
