தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

மாலே: மாலத்தீவில் நடைபெறும் 20 வயதுக்குட்பட்டோருக்கான 8வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் மார்ச் 23ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரை நடக்கிறது. இத்தொடரில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகியவை ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. மாலை 4.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது.

வங்கதேசம் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்ததால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழலில் பாகிஸ்தான் களம் காண்கிறது. தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் 2019, 2022, 2023, மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்ற இந்தியா, இந்த முறையும் வலுவான அணியாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி, வரவிருக்கும் 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் தகுதிச் சுற்றுக்கான சிறந்த முன்னோட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: