புவனேஷ்வர்: தேசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் புவனேஸ்வரில் நடந்து வருகின்றன. மகளிர் பிரிவில் நேற்று நடந்த 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் உத்தரப்பிரதேச வீராங்கனை சலோனி குமாரி (21), 53.73 நொடிகளில் போட்டி தூரத்தை கடந்து முதலிடம் பிடித்து புதிய தேசிய சாதனை படைத்தார். இவர், 2005ல், பிங்கி பிரமாணிக், 400 மீட்டர் தூரத்தை 53.89 நொடிகளில் கடந்து படைத்த தேசிய சாதனையை தற்போது முறியடித்துள்ளார். சலோனி குமாரி, கடந்த 2025, ஜூலையில் சங்ரூர் நகரில் நடந்த இந்திய ஓபன் தடகளப் போட்டியில் 400 மீட்டர் தூரத்தை, 57.16 நொடிகளில் கடந்திருந்தார்
