விராட் கோலி சிக்ஸ் பேக் இணையத்தில் வைரல்

பெங்களூரு: இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தற்போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நேரங்களில் லண்டனில் வசித்து வருகிறார். இந்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்தியா வந்துள்ள அவர் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

களத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரம் விராட் கோலி தீவிர உடற்பயிற்சிகள் மேற்கொள்வது வழக்கம். இதற்காக அவர் தனது உடலை மெருகேற்றி சிக்ஸ் பேக்காக மாற்றியுள்ளார். சின்னசாமி மைதானத்தில் நடந்த பயிற்சியின் போது இதைக்கேள்விப்பட்ட சக வீரர்கள் அவரது சிக்ஸ் பேக்கை காண ஆசைப்பட, அவர் தனது டிசர்ட்டை விலக்கி தனது கட்டுமஸ்தான உடலை காண்பித்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: