6 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு இயந்திரங்கள் விடிய விடிய எடுத்து செல்லப்பட்டன: போலீஸ் பாதுகாப்பு; சிசிடிவி கண்காணிப்பு

 

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் விடிய விடிய எடுத்து செல்லப்பட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குபதிவு இயந்திரங்கள் முதல்கட்ட ஒதுக்கீடு நேற்று காலை தொடங்கி நடந்தது.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு 363 வாக்குச்சாவடிகளுக்கு 435 வாக்குச்சீட்டு இயந்திரம், 435 கட்டுப்பாட்டு இயந்திரம், 471 காகித தணிக்கை சோதனை இயந்திரங்கள், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு 322 வாக்குச்சாவடிகளுக்கு 386 வாக்குச்சீட்டு இயந்திரம், 386 கட்டுப்பாட்டு இயந்திரம், 418 காகித தணிக்கை சோதனை இயந்திரங்கள், குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு 316 வாக்குச்சாவடிகளுக்கு 379 வாக்குச்சீட்டு இயந்திரம், 379 கட்டுப்பாட்டு இயந்திரம், 410 காகித தணிக்கை சோதனை இயந்திரங்கள், பத்மநாபபுரம் தொகுதிக்கு 312 வாக்குச்சாவடிகளுக்கு 374 வாக்குச்சீட்டு இயந்திரம், 374 கட்டுப்பாட்டு இயந்திரம், 405 காகித தணிக்கை சோதனை இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு 301 வாக்குச்சாவடிகளுக்கு 360 வாக்குச்சீட்டு இயந்திரம், 360 கட்டுப்பாட்டு இயந்திரம், 390 காகித தணிக்கை சோதனை இயந்திரங்கள், விளவங்கோடு தொகுதிக்கு 300 வாக்குச்சாவடிகளுக்கு 361 வாக்குச்சீட்டு இயந்திரம், 361 கட்டுப்பாட்டு இயந்திரம், 391 காகித தணிக்கை சோதனை இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மொத்தம் 1914 வாக்குச்சாவடிகளுக்கு 2295 வாக்குச்சீட்டு இயந்திரம், 2295 கட்டுப்பாட்டு இயந்திரம், 2485 காகித தணிக்கை சோதனை இயந்திரங்களை கணினி மூலம் முதற்கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏதேனும் இயந்திரங்கள் செயலற்று இருந்தால், அவற்றிற்கு மாற்றாக பயன்படுத்த 381 வாக்குச்சீட்டு இயந்திரம், 381 கட்டுப்பாட்டு இயந்திரம், 571 காகித தனி சோதனை இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக இருப்பு வைக்க எடுத்து செல்லப்பட்டன. இன்று விடிய விடிய இந்த பணிகள் நடந்தது. இதில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்தில் எடுத்து செல்லப்பட்டது.

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு நாகர்கோவிலில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகம், குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம், பத்மநாபபுரம் தொகுதிக்கு செருப்பாலூரில் உள்ள திருவட்டார் தாலுகா அலுவலகம் ஆகியவற்றில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. விளவங்கோடு தொகுதிக்கு மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், கிள்ளியூர் தொகுதிக்கு தொலையாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் தாலுகா அலுவலகத்திலும் மின்னணு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் சிசிடிவி பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Related Stories: