ஆந்திராவில் டைரக்‌ஷன்; தமிழகத்தில் ஷூட்டிங்: பா.ஜனதா தொழிலதிபரின் பிடியில் விஜய்?

 

தமிழக முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். இவர் கட்சி ஆரம்பித்ததும் தங்களுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று அறிவித்தார். ஆனாலும் எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணி சேரவில்லை. இதனால் விஜய், தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டார். தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வை நடத்தி வருகிறார். விஜய், தவெகவை ஆரம்பித்ததில் இருந்தே கட்சிக்கு தேவையான செலவுகளை ஆந்திராவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பணம் மட்டும் கொடுத்து வந்த அந்த தொழிலதிபர், தற்போது கட்சிக்குள் என்னென்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு வருகிறாராம். தவெகவில் நாளுக்கு நாள் ஆந்திர தொழிலதிபரின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறதாம். தொழிலதிபர் என்ன சொல்கிறாரோ அது தான் வேதவாக்கு என்ற நிலைக்கு விஜய் வந்து விட்டாராம். வேட்பாளர் தேர்விலும் அவருடைய ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறதாம்.

இதுகுறித்து தவெக வட்டாரத்தில் கூறியதாவது: விஜய் கட்சி ஆரம்பித்தபோது அவருக்கு நெருங்கிய தொழிலதிபர்கள் ஏராளமானோர் இருந்தனர். ஆனால், தற்போது ஆந்திராவை சேர்ந்த மூன்று எழுத்து பெயர் கொண்ட ஒருவர் தான் சென்னையில் தங்கி தவெகவை வழிநடத்தி வருகிறார். எந்த ஒரு கூட்டம், கட்சி நிகழ்ச்சிக்கு பணம் தேவையென்றாலும் இவர் மூலம் தான் பணம் செல்கிறது. இவர் ஆந்திராவில் கல் குவாரி உள்ளிட்ட ஏராளமான தொழில்களை செய்து வருகிறார். விஜய், ஆந்திர தொழிலதிபரை மீறி எதுவும் செய்ய முடியாத நிலைக்கு வந்து விட்டார். தவெக தொழிலதிபர் பிடியில் தான் உள்ளது. இதனால், தவெகவில் பதவி, தேர்தலில் சீட்டு கேட்பவர்கள் அந்த தொழிலதிபரையே நாடி செல்கின்றனர். அந்த தொழிலதிபர் பாஜவில் செல்வாக்கு மிக்கவராகவும் இருக்கிறார். தேர்தல் செலவுகளையும் தானே பார்த்து கொள்வதாக அந்த தொழிலதிபர் விஜய்க்கு உறுதி அளித்திருக்கிறார்’’ என்றனர்.

 

Related Stories: