எத்தனை முறை குட்டிக்கரணம் அடித்தாலும் மூழ்கும் கப்பலில் மூழ்கிதான் போவார்கள்

 

தமிழகத்தில் பாஜ எத்தனை முறை குட்டிக்கரணம் அடித்தாலும் எடுபடாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு கூட்டம் சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்தை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: பாஜவுடன் எந்தெந்த கட்சிகள் சேர்கின்றதோ அந்த கட்சிகள் எல்லாம் மூழ்கும் கப்பலில் பயணிக்கும் கட்சிகள் தான். அவர்கள் எல்லாம் மூழ்கி விடுவார்கள்.

தமிழகத்திற்கு தரவேண்டிய நிதிகளை பாஜ அரசு தருவது கிடையாது. திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் தடுத்து வருகின்றனர். இவ்வளவு செய்தும் உங்களுக்கு மக்கள் வாக்களித்து விடுவார்களா? தமிழகத்தில் பாஜ என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் எத்தனை அதிமுகவை கூட்டி வந்தாலும் ஒன்றும் எடுபடாது என்பதை அறிந்துதான் தமிழக ஆளுநராக இருந்த ரவியை மேற்குவங்கத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர். எந்த கட்சி மாநாடு நடத்தினாலும் உயிரிழப்புகள் ஏற்படுவது இல்லை. ஆகவே விஜய் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். விஜய்யின் அரசியல் வாழ்க்கை குறித்து மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: