மோடி அரசின் வஞ்சகத்திற்கு துணை போகும் பழனிசாமியின் பச்சை துரோகத்திற்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்: அமைச்சர் பெரியசாமி அறிக்கை

சென்னை: ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி வெளியிட்ட அறிக்கை: 100 நாள் வேலை திட்டத்தை முடக்க ‘விபி-கிராம் ஜி’ எனும் புதிய சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதைக்கூட அமல்படுத்த மோடி அரசு தயங்குகிறது. இதை முற்றிலும் ஒழித்துக் கட்டும் முடிவில் மோடி அரசு இருக்கிறது போல. விபி-கிராம் ஜி திட்டத்தில் மாநிலங்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்றியிருக்கிறார்கள். எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமி, இந்த அநீதிக்கு வக்காலத்து வாங்கி தமிழ்நாட்டுக்கு துரோகத்தை செய்தார். கிராமப்புற மக்களின் வயிற்றில் அடிக்கும் புதிய சட்டத்தை ஆதரித்து தனது துரோக பணியை செவ்வனே செய்து முடித்த பழனிசாமி, தான் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதும் தெரிந்தும் 150 நாட்களாக வேலையை உயர்த்துவேன் என நாடகமாடிக் கொண்டிருக்கிறார்.

புதிய சட்டத்தை ஒன்றிய அரசு உடனே அமல்படுத்த வேண்டும் என்று கூடச் சொல்ல பழனிசாமிக்கு துணிவில்லை. 100 நாள் வேலை திட்டத்திற்கு எதிராக ஒன்றிய பாஜ அரசு செய்து வரும் வஞ்சகத்திற்கும் பழனிசாமியின் பச்சைத் துரோகத்திற்கும் மிக விரைவில் தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: