மதுரையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது: மதுரையிலும், திருச்சியிலும் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் பிரதமர் மோடி வழங்கியுள்ளார். சிலிண்டர் பிரச்சனையில் சரியான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ளும். எடப்பாடி பழனிசாமி பல்வேறு தேர்தல் வியூங்களை வகுத்து வருகிறார். குறிப்பாக அதை எல்லாம் நாங்கள் மக்களிடத்தில் எடுத்துச் செல்ல உழைத்து வருகிறோம்.
கூட்டணி குறித்து பல்வேறு இலக்கணத்தை எடப்பாடி பழனிசாமி படைத்து வருகிறார். தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் மக்களுக்கு அறிவிப்பார். அதிமுக தலைமையை தேர்தலுக்கு பின்பு பாஜ மாற்றிவிடும் என்பதெல்லாம் தவறு. கூட்டணி தர்மத்தை பாஜ கடைபிடித்து வருகிறது. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பாஜ தலைவர்களே கூறிவிட்டார்கள். இவ்வாறு தெரிவித்தார்.
