கொள்கை கோட்பாடு இல்லாத மனிதர் விஜய்; ஒரு இடத்துல கூட தவெக தேறாது: சரத்குமார் சர்டிபிகேட்

திருச்சியில் சரத்குமார் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்யும் இடத்தில் நான் இல்லை. என்டிஏ கூட்டணிக்கு விஜய் வருவதைப் போல தெரியவில்லை. ஊடகத்தினர் தான் இதை கேட்டு வருகிறீர்கள். அதைப்போன்ற தகவல் இருப்பதை போல் தெரியவில்லை. விஜய் வந்தால் நல்லது. கூட்டணிக்கு வரவில்லை என்றால் கெட்டது என்றெல்லாம் நான் சொல்ல முடியாது. விஜய்க்கு அரசியலில் சிறப்பான செயல்பாடு கிடையாது. விஜய் இலவசத்தை அறிவித்துள்ளார். இலவசத்தை அளிக்கமாட்டேன் என பேசிய விஜய், அதை விட்டிருக்கலாமே. மக்களுக்கு தேவைப்படுவதற்கு இலவசம் கொடுக்கின்றோம். இவர், இலவசத்தை பற்றி பேசாமல் புதிய கொள்கைகளையும், ஆட்சி முறையையும் கொண்டு வருவேன் என்று சொல்ல வேண்டியது தானே. அவர் ஊழலற்ற ஆட்சியை கொடுப்பேன் என்றுதான் முதற்கட்டமாக சொல்ல முடியும்.

ஒரு கட்சி ஆரம்பித்தவர் திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று சொல்லத்தான் முடியும். கொள்கைகள், கோட்பாடு இல்லாத ஒரு மனிதர் விஜய். 1996ல் எனக்கும்தான் கூட்டம் கூடியது, அனைவருக்கும் தான் கூட்டம் வரும். கூட்டத்தை வைத்து தீர்மானிக்க முடியாது. அரசியல் களம் செல்லும் பொழுது அங்கு என்ன நிலவரம் இருக்கிறது என்பதை சென்ற பிறகுதான் பார்க்க முடியும். தேர்தல் களத்திற்கு நாங்கள் சென்று மக்களிடம், நாங்களை வைக்கும் திட்டங்களை பொறுத்து வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். விஜய் அரசியல் வருகையை வரவேற்கிறேன். ஆனால் கொள்கை கோட்பாடு இல்லாமல் விஜய் பேசி வருகிறார். தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்னுடன் பயணித்தவர்கள் போட்டியிடுவார்கள். 15 சதவீதம் வாக்குகள் விஜய் வாங்குவார் என்று உங்கள் கருத்துகணிப்பு இருந்தால் கூட, ஒரு இடத்தில் கூட தவெக வெற்றிபெறாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: