எல்லாரும் வர்றாங்க.. விஜய் குறித்த கேள்விக்கு எல்.முருகன் பதில்

திருச்சிக்கு நேற்று வந்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனிடம், என்டிஏ கூட்டணியில் தவெக தலைவர் விஜய் இணைவாரா என நிருபர்கள் கேட்டபோது, ‘எல்லாரும் வர்றாங்க…. எல்லாரும் வர்றாங்க…. எல்லாரும் வர்றாங்க…’ என்றார். விஜய் வருகிறாரா என தொடர்ந்து கேட்ட போது, பேசுவாங்கண்ணா… அண்ணே பேசுவாங்க… என்று கூறிக்கொண்டே காரில் புறப்பட்டு சென்றார்.

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி, தேர்தல் நேரத்தில் அழுத்தம் கொடுப்பதை வைத்து பார்க்கும் போது, விஜய்யை தேஜ கூட்டணியில் சேர்ப்பதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது என்றே அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது.

Related Stories: