திருச்சி பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டலில் தங்குவதற்காக வந்தார். அப்போது அவரிடம், பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிறாங்க என்று நிருபர்கள் கேட்டனர்.
“அதற்கு கொஞ்சம் தள்ளி இருங்க தம்பி…. இப்ப தான் நான் வருகிறேன்…. பிரதமர் வந்தா… அப்புறம் பேசி கொள்ளலாம் தம்பி… ஏய் கொஞ்சம் இருப்பா… தள்ளி இருங்கப்பா… என்னை மாட்டி விட்டு கட்சியில் இருந்து நீக்க பார்க்கிறீர்களா?. இப்ப தான் நான் உள்ளே நுழைகிறேன்… விஜய் வருவாரா என்பது நமக்கு எப்படி தெரியும்… எப்படி பேட்டி கொடுக்க முடியும்’’ என்று கூறி விட்டு திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்து நழுவி சென்று விட்டார்.
