வின் பண்ற வேட்பாளர கேட்டா அண்ணாமலை, வானதிய சொல்றீங்க… பாஜவை அசிங்கப்படுத்திய அதிமுக

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு குறைந்தபட்சம் 2 சீட், அதற்கு மேல் வழங்க வேண்டும் என அக்கட்சியினர் அடம் பிடித்து வருகிறார்களாம். தற்போதைய துணை ஜனாதிபதி, கோவை எம்.பி., தொகுதியில் நின்று ஜெயித்தவர். வானதி சீனிவாசன் ேகாவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தார். எனவே, கோவையில் நாங்க ரொம்ப ஸ்ட்ராங்க் எனக்கூறி பேச்சுவார்த்தை நடக்குதாம். ஆனால், அதிமுக தரப்பு, “நீங்க சீட் கேட்குறது சரிதான்… யார் கோவையில் நிக்க போறாங்க.. வானதி மேல மக்கள் மத்தியில் அதிருப்தி இருக்குது… அவுங்க துவக்கி வெச்ச திட்டம் எல்லாம் பப்ளிசிட்டிக்காக போட்ட டிராமாவா இருக்குது. குடிநீர், பால் பாக்கெட், பஸ் ஸ்டாப் எல்லாம் பெயிலியர் திட்டம்.

சர்வே செய்து பார்த்தப்போ அவுங்க ஜெயிக்க முடியாதுன்னு ரிப்ேபார்ட் வந்திருக்குது… அண்ணாமலைக்கு சீட் தரலாம். அவருக்கு எந்த ஏரியா செல்வாக்குன்னு அவருக்கே தெரியாது. கரூர்ல அவர் போட்டியிடுவாரா? கோவையில் இருக்கிற மத்த பாஜ நிர்வாகிகள் யாருன்னு மக்களுக்கு தெரியாது. அவுங்க நிக்க வெச்சு அறிமுகம் செய்யறதுக்குள்ள தேர்தல் முடிஞ்சு போயிரும்… நல்ல வேட்பாளர் இல்லாம திமுக கூட்டணியுடன் நாம மோத முடியாது… வெளியூர்ல இருந்து பாஜ வேட்பாளர்களை கூட்டி வந்து கோவையில் போட்டி போட வைக்க முடியாது… அப்படி செஞ்சா டெபாசிட் வாங்கறது சிரமம்… அதனால ஜெயிக்கற மாதிரி வேட்பாளர் இருந்தா சொல்லுங்க…’’ என அதிமுக தரப்பு கறாரா சொல்லிட்டாங்
களாம். கட்சியில… ஆளே இல்லாம சீட் கேட்கறீங்களே… என அதிரடியாக பேசி விட்டார்களாம். இதைக்கேட்டு, ரொம்ப அசிங்கமா போச்சே.., எப்படி சமாளிக்கிறது…? என பாஜ மேலிடம் புலம்புதாம்.

Related Stories: