தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலம் 53வது வார்டு முடிச்சூர் – காந்தி சாலை சந்திப்பில் ரவுண்டானா பகுதியை அழகுபடுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், ரூ.24.50 லட்சம் மதிப்பீட்டில் அப்பகுதியை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் பூச்செடிகள், வண்ண விளக்குகள், பாரம்பரியமான ஜல்லிக்கட்டு மாடு அடக்கும் வீரர் சிலை ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா திறந்து வைத்தார். உடன் மேயர் வசந்தகுமாரி, மாநகராட்சி ஆணையர் பாலசந்தர், மண்டல குழு தலைவர்கள் காமராஜ், இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ரமணிஆதிமூலம், சுரேஷ் உட்பட பலர் இருந்தனர். இதேபோல், தாம்பரம் சட்டமன்ற தொகுதி புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம், முடிச்சூர் ஊராட்சியில் ரூபாய் 76 லட்சம் மதிப்பீட்டில் நவாப் அபிபுல்லா நகர் பூங்கா சீரமைக்கும் பணியை, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
- தாம்பரம்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஆர். ராஜா
- முடிச்சூர்-காந்தி சாலை
- தம்பிராமம் கழகம்
- 4வது மண்டலம் 53வது வார்டு
