பாலியல் தொந்தரவு கொடுத்து விட்டு தப்பிய வாலிபர்களை தந்தையுடன் விரட்டிச் சென்று பிடித்த பள்ளி மாணவி: 5 கி.மீ தூரம் பைக்கில் துரத்தி மடக்கினர்

 

களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கோவில்பத்தில் உள்ள டியூசன் சென்டரில் டியூசன் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை மாணவி வழக்கம் போல் டியூசன் சென்று விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் மாணவியை வழிமறித்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். மாணவி சத்தம் போடவே அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அங்கு வந்தனர். இதையடுத்து வாலிபர்கள் மாணவியை விட்டு விலகி பைக்கில் ஏறி தப்பிச் சென்றனர்.

தகவலறிந்த வந்த மாணவியின் தந்தையும், மாணவியும் மற்றொரு பைக்கில் இருவரையும் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். அவர்களிடம் சிக்காமல் இருக்க வாலிபர்கள் பைக்கை அதிவேகமாக ஓட்டிச் சென்றனர். மாணவியின் தந்தையும் விடாமல் அவர்களை விரட்டினார். களக்காட்டில் இருந்து 5 கி.மீ தூரமுள்ள மாவடியில் சென்ற போது மாணவியும், அவரது தந்தையும் வாலிபர்கள் சென்ற பைக்கை முந்திச் சென்று தடுத்து நிறுத்தினர். இதைப்பார்த்த வாலிபர்கள் இருவரும் பைக்கை போட்டு விட்டு, சாதோட்டத்திற்குள் புகுந்து ஓடினர். மாணவியும், அவரது தந்தையும் விடாமல் விரட்டிச் சென்றனர். விஷயமறிந்த மாவடியைச் சேர்ந்த பொதுமக்களும் துரத்தினர்.

பின்னர் தோட்டத்துக்குள் பதுங்கியிருந்த ஒருவரை பொதுமக்கள் பிடித்து திருக்குறுங்குடி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருக்குறுங்குடி அருகேள்ள வட்டக்குளத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சிவக்குமார் (29) என்பதும், தப்பி ஓடியது அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரவணன் (29) என்பதும் தெரியவந்தது. அதனைதொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்தனர்

Related Stories: