இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு கடத்தல்: 6 கிலோ தங்கம் பறிமுதல்

 

ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கடல் வழியாக தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் மாதகல் கடற்பகுதியில், அந்நாட்டு கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த பைபர் படகை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தங்கம் கடத்தி கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து படகில் இருந்த, யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரை கைது செய்து, படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6.085 கிலோ தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.10 இருக்கும் என தெரிகிறது. தொடர்ந்து மேல் நடவடிக்கைக்காக கைதான இருவரையும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தையும் சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: