சென்னை அம்பத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராம் பேசுகையில், ‘தற்போதைய சூழலில் குடும்பத்துடன் கலந்துரையாட வேண்டி உள்ளது. நீங்கள் எடுக்கக்கூடிய முடிவு அடுத்த ஐந்து ஆண்டுகள் மட்டும் அல்ல அடுத்து வர சந்ததியை நிர்ணயிக்கக்கூடிய முடிவாக உள்ளது. விஜய் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து உள்ளார். அதில் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பார்கள் என கூறியுள்ளார்.
ஆனால் அவரது வீட்டில் உள்ள பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது கூட தெரியாது. இவரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த துறைகள் இருந்தால் நாடு சீரழிந்து போகும். விஜய் அறிவித்துள்ள வாக்குறுதிகளை செயல்படுத்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இவர் ஒரு புறம் இருக்க எடப்பாடி பழனிசாமி அறிவித்த திட்டங்களுக்கு ரூ.60 ஆயிரம் கோடிகள் வரை செலவாகும்.
இவர்களுக்கு பட்ஜெட்டும் தெரியவில்லை. எப்படி நடைமுறைப்படுத்துவது என்றும் தெரியவில்லை. வட்டிக்கு கடன் வாங்கினால் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும். விஜய் செத்தால் பரவாயில்லை, ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சாகடிக்க கூடாது. இவர்கள் சொன்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 18 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
அப்படி கொண்டு வர இவர்களுக்கு வாய்ப்பே கிடையாது. நடக்காத விஷயங்களை எல்லாம் சினிமா மாதிரி பேசிக்கொண்டு உள்ளனர். விஜய் சொன்னால் கூட இப்படி பரவால்ல, எடப்பாடி பழனிசாமியும் இப்படி எல்லாம் கூறுகிறார். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் நம் முன்னால் இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது நம்முடைய எதிர்காலம் மிகவும் பயங்கரமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
