தமிழகத்தில் கடந்த தேர்தலை விட முதல்வர் மு.க.ஸ்டாலின், மகா கூட்டணி அமைத்துள்ளார். இதனால் உற்சாகம் அடைந்த திமுகவினர் தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகின்றனர். தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் அதிகளவில் விருப்ப மனுக்கள் குவிந்துள்ளன. நான் முதல்வன் திட்டம், பெண்களுக்கான திட்டம் உள்பட பல்வேறு சிறப்பான திட்டங்களால் திமுக அரசின் மீதான நம்பிக்கை மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் புதுச்சேரியிலும் எதிரொலிக்கிறது.
திமுகவும், காங்கிரசும் தனித்து போட்டியிட்டால் எளிதாக வென்றுவிடலாம் என கணக்கு போட்டது. ஆனால் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளதால் பாஜ, என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு பேரிடியாகி அமைந்துவிட்டது. மதச்சார்பின்மையை தாங்கி நிற்கும் இந்த 2 பெரிய கட்சிகளும் ஒரே அணியில் நீடித்தால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த முடிவுதான் பெரும்பாலும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
திமுகவும், காங்கிரசும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அப்போது கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிய கம்யூனிஸ்ட் வழக்கம்போல் தனித்து போட்டியிட முடிவு எடுத்துவிட்டாலும், மற்ற கட்சிகளான விசிக, இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, மநீம உள்ளிட்டவற்றையும் அரவணைத்து செல்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் போட்டியிடும் முடிவை இருகட்சிகளின் நிர்வாகிகளும் தங்களது மேலிட பொறுப்பாளர்களிடம் வலியுறுத்தினாலும் இரு கட்சித் தலைமை எடுக்கும் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டு ஒருங்கிணைப்புடன் பணியாற்ற முடிவு செய்துள்ளனர். 2026 பொதுத்தேர்தலில் வெற்றியை மட்டுமே ஒரே குறிக்கோளாக கொண்டு தீவிரமாக இறங்கியுள்ளதால் அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் புதுஉற்சாகம் அடைந்துள்ளனர்.
