எடப்பாடியை விட எனக்கு செல்வாக்கு அதிகம் 10 தோல்வி பழனிசாமிக்கு 11வது தோல்வி கன்பார்ம்: தனியரசு கலாய்

மதுரை அலங்காநல்லூரில் கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் தனியரசு, அளித்த பேட்டி: திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், வடஇந்திய ஆதிக்க சக்திகளின் தலையீடு இல்லாமல் தமிழகத்தை தலை நிமிர செய்துள்ளார். 10 தோல்வி எடப்பாடி பழனிசாமி வரும் சட்டமன்ற தேர்தலில் 11வது தோல்வியை சந்திப்பது உறுதி. வரும் சட்டமன்ற தேர்தலில் வலுவான திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மேற்கு மண்டலம் எப்போதும் அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும்.

இந்த தேர்தலில் மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து கொங்கு மக்களின் சமுதாய கட்சிகளும் திமுக கூட்டணியில் இணைந்துள்ள காரணத்தினால் அதிமுக தொண்டர்கள் கூட இந்த பகுதியில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட வலுவான அதிமுகவை தன்னுடைய சுயநலத்துக்காகவும், பதவி சுகத்திற்காகவும் பாஜவிடம் அடகு வைத்து விட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

இன்னும் தேர்தல் கூட்டணி கூட முழுமையாக முடிவடையாத நிலையில் அவர், பொதுச்செயலாளராக தொடர்வது சந்தேகம் என்ற பரவலான செய்தி இப்போது வருகிறது, அடுத்த பொதுச்செயலாளராக தங்கமணியோ, வேலுமணியோ வருவதற்கு வாய்ப்புள்ளது என டெல்லி தகவல்கள் கூறுகிறது. எடப்பாடி நிற்கக்கூடிய தொகுதியில் திமுக கூட்டணியில் எனக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து வழங்கினால் அவரை எதிர்த்து போட்டியிட தயாராக உள்ளேன். உறுதியாக வெற்றி பெறுவேன். அவரை விட எனக்கு அதிக மக்கள் செல்வாக்கு அந்த பகுதியில் உள்ளது.

மேற்கு மண்டலத்தில் திமுக ஒட்டு மொத்தமாக வெற்றி பெறும். ஓபிஎஸ், சசிகலா போன்றவர்கள் அதிமுகவில் இருந்து வெளியேறியதால் தென் மாவட்டம், டெல்டா மாவட்டம், மேற்கு மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள முக்குலத்தோர் சமுதாயம் சார்ந்த தொண்டர்கள் அதிமுக தலைமை மீது விரக்தியில் உள்ளார்கள். எனவே அப்படியுள்ள அதிமுக தொண்டர்கள் கூட திமுக கூட்டணிக்கு வாக்களிக்க அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினார்.

* அரசியலுக்கு லாயக்கற்றவர் விஜய்
‘‘குடும்பத்தில் உள்ள தாய், தந்தை, மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு தனிமனித சந்தோஷத்திற்காக நடிகையுடன் தொடர்பில் உள்ள விஜய் அரசியலுக்கு லாயக்கற்றவர். பண்பாடு, கண்ணியம், கடமை, உணர்வு இல்லாதவர்கள் மக்கள் போற்றும் தலைவராக உருவாக முடியாது’’ என்று தனியரசு தெரிவித்தார்.

Related Stories: