சென்னை: வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில்சேவைக்கு அனுமதி தராமல் ஒன்றிய அரசு தாமதம் என தகவல் வெளியாகியுள்ளது. வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் நாளைமுதல் இயக்கப்படும் என அறிவித்த நிலையில் தாமதம் ஆகியுள்ளது. டெல்லியில் இருந்து வந்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மேலும் சில பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
