தஞ்சாவூரில் நடிகர் விமல் அளித்த பேட்டி: விஜய் கூட்டத்திற்கு அவரது வாகனத்தை பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளார். அக்கட்சியின் தலைவரே ஒரு அறிக்கையும் இதுவரை கொடுக்கவில்லை. நம்ம என்ன கொடுக்க போகிறோம். கும்பல் கூடும்தான். நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வண்டியை பின்தொடர்ந்து போவதெல்லாம் தவறான செயல். நாம் ஏன் அந்த அளவுக்கு இருக்க வேண்டும். பிடித்தால் மனத்திற்குள் வைத்து கொள்ளுங்கள். அதற்கென்று விரட்டி கொண்டு போய் உயிரை பணயம் வைத்து போக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விஜய், திரிஷா ஒரே காரில் வந்த திருமணவிழாவில் கலந்துகொண்டது குறித்து கேட்ட கேள்விக்கு, ‘இப்போ அந்த காரை யார் வச்சிருக்கா… அதான் எனக்கு வேலையா, அந்த காரை இப்ப யார் ஓட்றான்னு எனக்கு என்ன தெரியும். (கரகாட்டகாரன் பட காமொடியை சுட்டிக்காட்டி நக்கலாக பதில் அளித்தார்) விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். என்னுடைய பார்வை… எல்லாருடைய பார்வை போல்தான். விஜயகாந்த் மாதிரி, எம்ஜிஆர் மாதிரி பெரிய ஸ்டார் ஆக வருவாரா? முதலமைச்சர் ஆவாரா அது பத்தி எனக்கு தெரியவில்லை, 2026 தேர்தல் முடிந்து தான் தெரியும்’என்று கூறினார்.
