சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் வலிமை, நம்பிக்கை, அதிகாரமளித்தலை வலியுறுத்தி சூரியன் எப்.எம் சார்பில் இன்று பெண்களுக்கான சிறப்பு வாக்கத்தான் நிகழ்வு நடைபெறுகிறது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் சூரியன் எப்.எம் சார்பில் பெண்களுக்கான வாக்கத்தான் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் பெண்களுக்கான சிறப்பு வாக்கத்தான் நிகழ்வு சென்னை, தீவுத்திடலில் நடைபெறுகிறது. Give to Gain என்ற கருப்பொருளில் பெண்களின் வலிமை, நம்பிக்கை, அதிகாரமளித்தலை வலியுறுத்தி இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கி காலை 9 மணி வரை இந்த நடைபயணம் நடைபெறுகிறது.
இந்த வாக்கத்தான் நிகழ்வு 3 கி.மீ மற்றும் 5 கி.மீ தூரம் நடைபெறும். பதிவு கட்டணமாக ரூ.299 செலுத்த வேண்டும். மேலும் பெண்களின் ஒற்றுமை மற்றும் அதிகாரமளித்தலை கொண்டாடுதல் நூற்றுக்கணக்கான பெண்களுடன் இணைந்து மாற்றத்தை நோக்கி அடிவைக்க இந்த சிறப்பு நடைப்பயணத்தில் பங்கேற்குமாறு சூரியன் எப்.எம் அழைப்பு விடுத்துள்ளது.
