சென்னை: தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி: சங்கீதாவை பற்றி, அது தனிப்பட்டவர்களின் வாழ்க்கை. அதனால், அதில் நான் தலையிட்டு பெரிதாக பேச விரும்பவில்லை. நாளை (இன்று) மகளிர் தினத்தை நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம். ஆக, சங்கீதா போன்றவர்களுக்கு கூட நியாயம் கிடைக்க வேண்டும்.
அவர் ரொம்ப சிரமத்தில் இருக்கிறார். கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று எல்லாம் தகவல் கொடுத்து இருக்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். யாராக இருந்தாலும் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பெண்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பது தான் நம் எல்லோரின் கவலையாகவும், கவனமாகவும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
