விஜய் கூட்டத்துக்கு போனா ஜாக்கிரதையாக இருக்கணும்: நடிகர் விமல் எச்சரிக்கை

தஞ்சையில் நடிகர் விமல் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நடிகர் விஜய்யின் கூட்டத்திற்கு கூட்டம் கூடுகிறது. கூட்டத்திற்கு செல்பவர்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவரின் வாகனத்தை பின்தொடரக்கூடாது. அது தவறான விஷயம்.

நடிகரை உங்களுக்கு பிடிக்கும் என்றால் கூட்டத்திற்கு செல்லுங்கள், விசில் அடியுங்கள், கை தட்டுங்கள். மனசுக்குள்ள வச்சுக்கங்க. அதுக்காக உயிரைப் பணயம் வச்சு போகணும்னு அவசியம் எனக்கு தெரிஞ்சு கிடையாது. அந்த மாதிரி பண்ணாதீங்க. நடிக்கும் வேலையே பெரியதாக உள்ளது. நான் அரசியலுக்கு வருவதெல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்று. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: