அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வியாழக்கிழமை மாலை சேலம் வந்தார். நேற்று முன்தினம் முழுவதும் அவர் சேலத்தில் தங்கியிருந்தார். நேற்று முன்னாள் அமைச்சர்களான கே.சி.வீரமணி, கரூர் விஜயபாஸ்கர், உதயக்குமார், பரஞ்ஜோதி, பாலகிருஷ்ணாரெட்டி, சமீபத்தில் அதிமுகவில் இணைந்த வெல்லமண்டி நடராஜன், மதுரை செல்லூர் ராஜூ உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினர்.
இதனால் நெடுஞ்சாலை நகரில் காலை முதலே தொண்டர்களின் கூட்டம் அதிகளவு இருந்தது. ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த செல்லமுத்து உள்பட 100க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டனர்.
