தனது மனைவிக்கு பாதுகாப்பு தராதவர் மக்களுக்கு தருவாரா? திரையுலகினர் விஜய்க்கு சரமாரி கண்டனம்

சென்னை: நடிகர் விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கு பரபரப்பான கட்டத்தில் உள்ளது. தன்னை நீலாங்கரையில் உள்ள பங்களாவுக்குள் விஜய் அனுமதிப்பதில்லை என சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் திரைத்துறையை சேர்ந்தவர்களும் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளனர். அதன் விவரம்:

நடிகர் எஸ்.வி.சேகர்: தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு தர முடியாதவர், மக்களுக்கு எப்படி பாதுகாப்பு தருவார். தனது வீட்டு பிரச்னையை தீர்க்க முடியாதவர், மக்களின் பிரச்னைகளை எப்படி தீர்ப்பார்? தன்னை நம்பி வந்த ஒரு பெண்ணை நடு வழியில் விட்டுச் செல்லும் தற்குறியாக விஜய் இருக்கிறார். ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துவிட்டு, இன்னொரு பெண்ணுக்கு வாழ்க்கையை தந்து விட முடியுமா?

இயக்குனர் அமீர்: கட்டிய மனைவியையும் பிள்ளைகளையும் வீட்டிலிருந்து துரத்திவிட்டு மகளிர் தினத்தை விஜய் கொண்டாடுவதற்கு தகுதியே கிடையாது. தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் (விஜய்) உருவாகிக் கொண்டிருக்கிறார். திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்செயன்: விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது வேறொரு பெண்ணுடன் திருமணம் கடந்த உறவில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற செயல்கள் தவறுகளை எளிதாக எடுத்துக்கொள்ளும் மனோபாவத்தை உருவாக்கும். அவரின் ரசிகர்களும் அதை இயல்பாக ஏற்று கொள்கிறார்கள். பெண் வாக்காளர்களின் வாக்கு சதவீதம் பெருமளவில் விஜய்க்கு குறையும்.

நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன்: திரிஷாவுடன் ஒன்றாக திருமண நிகழ்ச்சிக்கு சென்றதன் மூலம் விஜய் நமக்கு சொல்ல வருவது என்ன? ஒருவரை தலைவராக ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக அவரிடம் என்னென்ன நல்ல குணங்கள் இருக்கிறது. அவருக்கு அரசியலில் என்ன அனுபவம் இருக்கிறது என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

நடிகை சனம் ஷெட்டி: திருமண நிகழ்ச்சியில் விஜய்- திரிஷா ஒன்றாக கலந்துகொண்டது முறையல்ல, உங்களின் ஒரு நீண்ட நாள் ரசிகையாக உங்களின் இந்த செயல் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. மனைவியின் துயரத்தை இப்படி அலட்சியப்படுத்தக்கூடாது.

‘அடங்காதே’, ‘டீசல்’ பட இயக்குனர் சண்முகம் முத்துசாமி: விஜய் சரியான பாதையை தேர்ந்தெடுக்காமல், நடிப்பு துறையில் கிடைத்த புகழை மட்டுமே வைத்து, தன் அரசியல் அடையாளத்துக்கு பயன்படுத்தும், மக்களாட்சியின் அடிப்படை தத்துவத்துக்கு எதிரான வேலையை செய்கிறார். சினிமா மயக்கத்தின் காரணமாக சில இளைஞர்கள் ஒரு நடிகருக்கு வாக்களிப்பது ஒரு சமூக கேலிக்கூத்து. அதை எப்படி நாம் ஆதரிக்க முடியும்? அதை எதிர்த்துதான் ஆகவேண்டும்.

Related Stories: