பேராசிரிய பெருந்தகை எனும் கொள்கை பேரொளி: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: பேராசிரிய பெருந் தகை எனும் கொள்கை பேரொளி கழகத்துக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கலைஞருடன் கரம்கோத்து நின்றவர் பேராசிரியர்.

கலைஞரின் மறைவுக்கு பிறகு எனக்கும் ஆறுதலாய், அரவணைப்பாய், வழிகாட்டியாய் இருந்தவர். நட்புக்கும் – கொள்கை பற்றுக்கும் இலக்கணமாக திகழ்ந்த நம் இனமான பேராசிரியரின் நினைவு நாளில் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதியேற்போம்! உழைப்போம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: