மதுரை, மார்ச் 2: மதுரை திருமால்புரம் மருதங்குளத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் மகன் சஞ்சய்(11). இவர் 6ம் வகுப்பு படித்து வந்தார். இவர் இரண்டு தினங்களுக்கு முன் நண்பர்களுடன் மருதங்குளம் கண்மாய்க்கு குளிக்க சென்றார். சஞ்சய்க்கு நீச்சல் தெரியாத நிலையில், கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருப்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
