சமையல் செய்யும்போது காஸ் கசிந்து கொட்டகை தீப்பிடித்து எரிந்து நாசம்

 

வேளச்சேரி, மார்ச் 16: சமையல் செய்யும்போது காஸ் கசிந்து தீப்பிடித்ததால் கொட்டகை எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.
மேடவாக்கம் அருகேயுள்ள ஜல்லடியன்பேட்டை, சாய் கணேஷ் நகரில் கட்டுமான பணி நடக்கிறது. அந்த இடத்தில் வடமாநிலத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி சபிக் (30) உள்பட ஐந்து குடும்பங்களை சேர்ந்தவர்கள் டென்ட் கொட்டகை அமைத்து தங்கி இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சபிக் வீட்டில் சமையல் செய்யும்போது திடீரென்று சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து அனைவரும் அங்கிருந்து தப்பிஓடினர். சிறிது நேரத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு துரைப்பாக்கம் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். மேலும் பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories: