வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

 

சாயல்குடி, மார்ச் 16:சாயல்குடி அருகே உள்ள தெற்கு நரிப்பையூர் கிராமத்தில் கடற்கரை அருகே உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வாலிநோக்கம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வாலிநோக்கம் கடலோர பாதுகாப்பு குழும எஸ்.ஐ சிவகுருநாதன் தலைமையிலான தலைமை காவலர்கள் மதியழகன், முருகப்பெருமாள், திருத்தணிகை வேலன், ராமர் உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்ட போது, வெளி மாவட்டங்களுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 65 மூட்டைகளில் இருந்த 1,040 கிலோ அரிசியை பறிமுதல் செய்து, அவற்றை ராமநாதபுரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் பதுக்கியவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: