திருப்போரூர், மார்ச் 16: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சியில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் அமைக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று கானத்தூரில் நடைபெற்றது. கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி எட்டியப்பன் தலைமை தாங்கினார். திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் எல்.இதயவர்மன் மீன் இறங்கு தளத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பையனூர் சேகர், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் கோவிந்தன், கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர், ஊராட்சி தி.மு.க. கிளை செயலாளர்கள் சௌந்தரபாண்டியன், குணசேகரன், சகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
