நாமக்கல், மார்ச் 16: காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய ஒன்றிய பாஜ அரசையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் கண்டித்து, நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 15 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்லில் மோகனூர் ரோடு பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில், திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி பேசியதாவது: மாவட்டம் முழுவதுமாக பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் நாட்டுக்கு பாஜ ஆட்சியில் திட்டங்களும் இல்லை. அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது.
