சிங்கம்புணரி அருகே வடமாடு மஞ்சு விரட்டு

 

சிங்கம்புணரி, மார்ச் 16: சிங்கம்புணரி அருகே மேலப்பட்டியில் சொக்கன் கருப்பர் கோயில் வடக்குழு சார்பாக வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து காளைகள் கொண்டுவரப்பட்டன. நீண்ட வடக்கயிற்றில் காளைகள் கட்டப்பட்டு, காளையர்கள் காளையை அடக்கினர். போட்டியில் ஒரு காளைக்கு 20 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 9 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், உரிமையாளர்களுக்கும் ரொக்க பரிசுகள், கட்டில், பீரோ, எவர்சில்வர் குடம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Related Stories: