சென்னை: சிதைக்கவோ, தவறாக எழுதவோ முயற்சிக்க வேண்டாம். திமுக- காங்கிரஸ் உறுதியான கூட்டணி என்று செல்வப்பெருந்தகை கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அளித்த பேட்டி: காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இது ஐடியாலஜிக்கல் கூட்டணி. இயற்கையான கூட்டணி. நம்பிக்கையுள்ள கூட்டணி. இதை தொலைகாட்சிகளோ, பத்திரிகையாளர்களோ சிதைப்பதற்கோ, தவறாக எழுதுவதற்கோ முயற்சிக்க வேண்டாம். எத்தனை தொகுதிகள் என்பதை கையெழுத்து போடும் போது சொல்கிறேன். கிரீஷ் சோடங்கர் சொல்லாததை சொன்னார் என்று எழுதுகிறீர்கள். இது எல்லாம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தவறாக செய்தி போட்டால் அவதூறு வழக்கு போடப்படும். கூட்டணியில் சீட்டை பேசி தீர்த்துக்கொள்வோம். நீங்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
சிதைக்கவோ, தவறாக எழுதவோ முயற்சிக்க வேண்டாம் திமுக-காங்கிரஸ் உறுதியான கூட்டணி: செல்வப்பெருந்தகை பேட்டி
- திமுகா
- காங்கிரஸ் உறுதிப்படுத்தல் கூட்டணி
- சென்னை
- திமுகா
- செல்வந்தர்கள் காங்கிரஸ்
- தமிழ்நாடு காங்கிரஸ்
- ஜனாதிபதி
- ரிச்வப்ப்ருண்டகா
- அண்ணா வித்யாலயா
- காங்கிரஸ் கட்சி
- ராஜ்ய சபா
