தொகுதி பங்கீடு குறித்து திமுக-விசிக இடையே இன்று முதல்கட்ட பேச்சு: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் அழைப்பு

சென்னை: தொகுதி பங்கீடு குறித்து திமுக விசிக இடையே இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது. விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 4 இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் இருந்து திமுகவுடன் மக்கள் நீதிமய்யம் கட்சியும் பயணித்து வருகிறது. அந்த கட்சியையும் இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது. மற்ற கட்சிகளுடனும் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்த வாரத்திற்குள் அனைத்து கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: