நாங்க எவ்வளவு பெரிய ஆளுன்னு தெரியுமா? பாஜவை மிரட்டும் கூட்டணி கட்சி

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியானது பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகின்றது. இந்நிலையில் இக்கட்சியின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில தலைவர் காளப்பட்டி பொன்னுசாமி, ‘‘தேசிய ஜனநாயக கூட்டணியில் நமது கட்சி அங்கம் வகிக்கிறது. ஆனால் நமது கட்சி பெயரை மேடைகளில் கூட சொல்வது இல்லை. இதுபற்றி பாஜ மேலிடத்தின் கவனத்திற்கு கொண்ட சென்ற பின்னர் தான் அவர்களுக்கு நம் கட்சி கூட்டணியில் இருக்கிற விஷயமே தெரிகிறது. அதன் பிறகு தான் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி பெயரை மேடைகளில் உச்சரிக்கின்றனர். நாம் ஒன்றும் சாதாரண கட்சி கிடையாது. குறிப்பிட்ட சதவீதம் வாக்கு வங்கியை நாடு முழுவதும் வைத்துள்ள தேசிய கட்சி. தமிழக சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் போட்டியிட சீட் கேட்டுள்ளோம். சீட் கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லை என்றாலும் தேர்தல் பணியை செய்வோம். பதவிக்காக எப்போதும் மத சார்பற்ற ஜனதா தளம் அலைவது கிடையாது’’ என்றார்.

Related Stories: