தா.பழூர், பிப்.27: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறை பொது தேர்வு நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகோபால் ஆணைக்கிணங்க, மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு வேல்முருகன் வழிகாட்டுதலின்படி, அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் காந்திமதி தலைமையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறை பொதுத்தேர்வு நடைபெற்றது.
இதில், 58 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதற்கு புறத்தேர்வளராக அறிவியல் ஆசிரியர் சிவக்குமார் செயல்பட்டார். தலைமை ஆசிரியர் காந்திமதி பார்வையிட்டார். ஆசிரியர் குணசேகரன், சுதா ஆகியோர் உடன் இருந்தனர்.இதில் தேர்வுக்கான அனைத்து அறிவியல் உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டது.
