ஜெயங்கொண்டம், பிப்.26: அரியலூர் சமத்துவபுரம் அருகில் நேற்று அதிகாலை 4 மணியளவில் சாலை விபத்தில் அடிபட்டு கிடந்த நபர் ஒருவரை, கீழப்பழுவூர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து விசாரித்தனர். அவர் ஈரோட்டை சேர்ந்த குமார ராமசாமி (43) என தெரிய வந்தது. தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பான சிகிச்சை அளித்து அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும், அவரிடம் இருந்த ஸ்மார்ட் போன், ரொக்க பணம் ரூ.8,995 மற்றும் தங்க மோதிரம், வெள்ளி மோதிரம் ஆகியவற்றை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ராஜேஷ் குமார், மருத்துவ உதவியாளர் செந்தில்குமார் ஆகியோர் மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இவர்களை மருத்துவர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
