உல்லாசமாக இருந்த போது எடுத்த வீடியோவை காட்டி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.4 கோடி மதிப்புள்ள 850 கிராம் தங்கம், வைர நகைகள் பறிப்பு: தாய், சகோதரன் கைது

சென்னை: புரசைவாக்கத்தில் வாடகைக்கு குடியிருந்த போது ஏற்பட்ட கள்ளக்காதலின் போது, இருவரும் ஒன்றாக இருந்த நிர்வாண வீடியோவை காட்டி தொழிலதிபரின் மனைவியை மிரட்டி ரூ.4 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள், வெள்ளி பொருட்கள் பறித்த கள்ளக்காதலன் தலைமறைவாகிவிட்டார். இதுதொடர்பாக கள்ளக்காதலனின் தாய் மற்றும் அவரது சகோதரனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கள்ளக்காதலனை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பை, ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.

சென்னை புரசைவாக்கம் முருகப்பா தெருவில் உள்ள அடுக்குமாடி குயிருப்பை சேர்ந்தவர் இந்து(35)(பெயர்மாற்றப்பட்டுள்ளது). தொழிலதிபரின் மனைவியான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் அண்ணாசாலையில் கார் மற்றும் ஆட்டோ ஸ்பேர் பார்ஸ் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இதற்கிடையே இந்து வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் கடந்த 2025ம் ஆண்டு சங்கீதா(53) தனது மூத்த மகன் திலீப்(34) மற்றும் இளைய மகன் அங்கிட்(31) ஆகியோருடன் வாடகைக்கு குடியேறினார். அப்போது சங்கீதா தொழிலதிபர் மனைவி இந்துவிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனால் தொழிலதிபர் மனைவி சங்கீதா வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
இந்த பழக்கத்தில் சங்கீதாவின் மூத்த மகன் திலீப் அடிக்கடி தொழிலதிபரின் மனைவியிடம் பேசி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியது. இதனால் திலீப் தொழிலதிபர் கடைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருக்கும் இந்து வீட்டிற்கு சென்று இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனால் தொழிலதிபர் மனைவி இந்து திலீப்புக்கு சரியாக வேலை இல்லாததால் செலவுக்கு தன்னிடம் உள்ள நகைகளை கொடுத்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தொழிலதிபரின் மனைவி தனது கள்ளக்காதலனிடம் வீட்டில் வைத்துள்ள தங்கம், வைர நகைகளை காட்டி எல்லாம் உனக்கு தான். நாம் இருவரும் சந்தோசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட திலீப், தொழிலதிபரின் மனைவியிடம் ஒவ்வொரு முறையும் உல்லாசமாக இருந்து விட்டு நகைகளை வாங்கி கொண்டு வந்துள்ளார். தொழிலதிபரின் மனைவியும் வீட்டில் சும்மா இருக்கும் நகைகள் தானே என்று கொடுத்து வந்துள்ளார்.

இதற்கிடையே கள்ளக்காதலன் திலீப் தனது வாடகை வீட்டை காதலியான தொழிலதிபர் மனைவியிடம் தெரிவிக்காமல் திடீரென கடந்த 10 நாட்களுக்கு முன்பு காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். வழக்கம் போல் தொழிலதிபர் மனைவி தனது கணவன் கடைக்கு சென்றதும், தனிமையில் இருக்க தனது கள்ளக்காதலனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனே அவரது தாய் சங்கீதாவுக்கு போன் செய்த போது, அவரது போனும் சுவிட்ச் ஆப் செய்து இருந்தது. இதனால் சந்தேகமடைந்த தொழிலதிபர் மனைவி, கள்ளக்காதலன் வீட்டிற்கு சென்ற போது, வீடு பூட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்யும் செக்யூரிட்டிகளிடம் ேகட்ட போது, இரவோடு இரவாக திலீப் வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாக கூறினார். அதை கேட்டு தொழிலதிபர் மனைவி அதிர்ச்சியடைந்தார்.

தனது கள்ளக்காதலனிடம் பல கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள், வெள்ளி பொருட்கள் கொடுத்து வைத்ததை திரும்ப எப்படி வாங்குவது என்று தெரியாமல் அவதிப்பட்டுள்ளார். அதேநேரம் தொழிலதிபர் தனது உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு செல்ல வேண்டி வீட்டில் உள்ள நகைகளை சரிபார்த்துள்ளார். அப்போது லாக்கரில் இருந்த தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் குறைந்து இருந்ததை கண்டு அவரது மனைவியிடம் கேட்டுள்ளார்.
அப்போது கணவரின் காலில் விழுந்து, திலீப் என்னுடன் தனிமையில் இருந்த போது ரகசியமாக செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்து என்னை மிரட்டி நகைகளை பறித்து சென்றதாக கூறி அழுதுள்ளார். அதன் பிறகு மொத்த நகைகளை பரிசோதனை செய்த போது, 850 கிராம் தங்க நகைகள், வைர நகைகள், 2.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் குறைந்தது தெரியவந்தது.பின்னர் சம்பவம் குறித்து தொழிலதிபர் தனது மனைவி
மூலமே வேப்பேரி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு கள்ளக்காதலன் திலீப் மற்றும் அவரது தாய், சகோதரன் மீது புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி போலீசார், தலைமறைவான திலீப் மற்றும் அவரது தாய் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது புரசைவாக்கம் பகுதியில் வேறு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது. உடனே போலீசார் நேற்று கள்ளக்காதலன் தாய் சங்கீதா மற்றும் அவரது சகோதரன் அங்கிட் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. உடனே கள்ளக்காதலன் தாய் சங்கீதா மற்றும் அவரது சகோதரன் அங்கிட் ஆகியோரை போலீசார் கைது செய்து வாக்குமூலம் பதிவு ெசய்தனர்.

மேலும், முக்கிய குற்றவாளியான திலீப் நகைகளுடன் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் திலீப் மும்பை வழியாக சொந்தமாநிலமான ராஜஸ்தான் சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தனிப்படை போலீசார் மும்பை மற்றும் ராஜஸ்தான் விரைந்துள்ளனர். தனிப்படை போலீசார் திலீப்பை கைது செய்தால் தான் இது போல் சென்னையில் எத்தனை தொழிலதிபர்கள் மனைவிகளை காதல் வலை வீசி அவர்களுடன் உல்லாசமாக இருந்து அதை வீடியோ எடுத்து நகை மற்றும் பணம் பறித்து வந்தது முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கள்ளக்காதலன் தாய் சங்கீதா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சங்கீதா தனது மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடியிருக்கும் பகுதியில் வீடு ஏதேனும் காலியாக இருந்தால், அந்த வீட்டிற்கு தனது மகன்கள் திலீப் மற்றும் அங்கிட் ஆகியோருடன் குடியேறுவார். அப்போது குடியிருப்பில் வசதியான தொழிலதிபர்கள் மனைவிகள் யாரேனும் தனியாக இருக்கிறார்களா என்று சங்கீதா நோட்டமிடுவார். அப்படி பகல் நேரத்தில் தனியாக இருக்கும் தொழிலதிபர்களின் மனைவிகளிடம் சங்கீதா நட்பாக பழகுவார். அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு சென்று பேசுவார். சமைக்கும் உணவுகளை கொடுத்து அவர்களிடம் நெருங்கி பழகி, தொழிலதிபரின் மனைவிக்கு தனது மகன்களை அறிமுகம் செய்து, சொந்தமாக தொழில் செய்ய முயற்சி செய்கிறார்கள் என கூறுவார். பிறகு தொழிலதிபரின் மனைவியின் செல்போன் எண்ணை வாங்கி, இரண்டு மகன்களில் யாரிடம் தொழிலதிபர் மனைவி பிரியமாக பேசுகிறார் என்று கவனித்து அந்த மகனிடம் தொழிலதிபர் மனைவியின் செல்போன் எண்ணை கொடுத்து, மெசேஜ் அனுப்பும் பழக்கத்தை ஏற்படுத்துவார்.

அதுபோன்று தொழிலதிபர் மனைவி இந்துவிடம் தனது மூத்த மகனிடம் அவரது செல்போன் எண் கொடுத்து மெசேஜ் அனுப்ப சொல்லி பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தொழிலதிபர் மனைவி இந்து, தனது கணவர் தன்னை கண்டு ெகாள்ளாததால் சங்கீதாவின் மூத்த மகன் திலீப் விரித்த வலையில் சிக்கியுள்ளார். பிறகு அடிக்கடி திலீப் தொழிலதிபர் மனைவியுடன் உல்லாசமாக இருந்து அவரது நம்பிக்கையை பெற்றுள்ளார். அதன் பிறகு, திலீப் தொழிலதிபர் மனைவி இந்துவிடம் நிர்வாணமாக இருவரும் ஒன்றாக இருக்கும் போது, ரகசியமாக படுக்கை அறையில் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

தற்போது தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டி விற்பனை ஆவதால், திலீப், தொழிலதிபர் மனைவி இந்துவிடம் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் பல கோணங்களில் எடுக்கப்பட்ட நிர்வாண புகைப்படங்களை காட்டி, பணம் கேட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத தொழிலதிபர் மனைவி, என்ன செய்வது என்று தெரியாமல் நகைகளை கொடுக்க மறுத்துள்ளார். அப்போது திலீப், ‘நாம் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ, புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றிவிடுவேன். அதோடு இல்லாமல் உனது கணவர் மற்றும் உறவினர்களுக்கும் இந்த வீடியோவை அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் வேறு வழியின்றி வீட்டில் உள்ள தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை தொழிலதிபர் மனைவி கொடுத்து வந்துள்ளார். இந்த விஷயம் தொழிலதிபருக்கு தெரிந்ததால், அவர் நடவடிக்கை எடுப்பதற்குள் சங்கீதா தனது மகன்கள் திலீப், அங்கிட் ஆகியோரை வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகியது தெரியவந்தது. இது போல், சென்னையில் பல இடங்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் தனிமையில் வசிக்கும் தொழிலதிபர்களின் மனைவிகள் மற்றும் மகள்களை தாய் சங்கீதா ஆலோசனைப்படி திலீப் மற்றும் அங்கிட் ஆகியோர் காதல் வலையில் வீழ்த்தி நகை மற்றும் பணத்தை பறித்து வந்ததாக கைது செய்யப்பட்ட சங்கீதா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இவர்கள் மீது மாதவரத்தில் 2 வழக்கும், ஐஸ்ஹவுஸ் பகுதியில் ஒரு வழக்கும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories: