வருசநாடு, பிப். 27: கடமலைக்குண்டு அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடமலைக்குண்டு போலீசார் நேற்று முன் தினம் சிறைப்பாறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஊத்து ஓடையில் டிராக்டரில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிக்கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். அவர்களைப் பிடிக்க முயன்ற போது அங்கிருந்த இருவரும் தப்பியோட முயன்றனர்.
அவர்களில் சிறைப்பாறையைச் சேர்ந்த விருமாண்டி (41) என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மற்றொருவரான பாண்டி (30) என்பவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் மற்றும் சுமார் 3/4 யூனிட் ஓடை மணலை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து கைதான விருமாண்டியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்
