வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ் மொழியில் வைக்க அறிவுறுத்தல்

பல்லடம், பிப். 27: பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ் பயன்பாடு குறித்து கோப்புகளை தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் சுந்தர் நேற்று ஆய்வு செய்தார். பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோப்புகள் மற்றும் பதிவேடுகளில் 90 சதவீதம் தமிழ் பயன்பாடு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருப்பது கட்டாயமாகும், 1948 மற்றும் 1959ம் ஆண்டு சட்ட திருத்தங்களின் படி அரசு ஆணைகள் 3312, 499 வாயிலாக நடைமுறை படுத்தபட்டுள்ளது.

பெயர் பலகையில் 10ல் 5 பங்கு தமிழில் இருக்க வேண்டும், மேலும், இது எளிமையாகவும் தெளிவாக இருக்க வேண்டும்.  தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்க பெயர் பலகைகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பானுப்பிரியா மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.

 

 

Related Stories: