காங்கயத்தில் ரூ.4.75 கோடியில் புதிய திட்ட பணிகள்

காங்கயம், பிப். 27: காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், பரஞ்சேர்வழி ஊராட்சியில் நேற்று மாலை ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் தெற்கு வலசு (சண்முகபாளையம்) மற்றும் குப்பநாயக்கன் வலசு பகுதிகளில் புதிய குடிநீர் கிணறு அமைத்தல் மற்றும் குடிநீர் குழாய் நீட்டிப்பு பணிகள் தொடக்க விழாவும், பாப்பினி ஊராட்சியில் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி தொடக்க விழாவும், வெள்ளக்கோவில் ஒன்றியம் வள்ளியரச்சல் ஊராட்சியில் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் பணிக்கு தொடக்க விழாவும்.

அமராவதிபாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் சாலை பலப்படுத்துதல் பணி துவக்கவிழா, குடியிருப்பு பகுதியில் சிமெண்ட் சாலை ரூ.14.50 லட்சம் அமைக்கும் பணியின் துவக்க விழாவும், வறட்டுகரை பகுதியில் ரூ.1.75 லட்சம் மதிப்பில் குடிநீர் டேங்க் நீட்டிப்பு பணி துவக்க விழாவும் நடைபெற்றது.

 

Related Stories: