பேரையூர், பிப். 27: பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர் ஒன்றிய அரசைக் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றாதே, மற்ற மாநிலங்களைப் போல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் உதவித் தொகை வழங்கிடு. மாநில அரசுகளை எந்த வகையிலும் நிர்ப்பந்தம் செய்யாதே என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத்தலைவர் முருகன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உசிலம்பட்டி ஒன்றியத் தலைவர் நாகராஜன், செயலாளர் சின்னச்சாமி, மாற்றத்திறனாளிகள் ஒதுக்கீடு கவுன்சிலர் முத்துச்சாமி உள்ளிட்ட டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, உசிலம்பட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
