முதல் முறை எம்எல்ஏக்களுக்கு கர்நாடகாவில் அமைச்சர் பதவி: ராகுல், கார்கேவுக்கு கடிதம்

 

பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த முதல் முறை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒன்றிணைந்து காங்கிரஸ் மேலிடத்தலைவர்கள் ராகுல், கார்கே, மாநில தலைவர் டி.கே.சிவகுமார், முதல்வர் சித்தராமையா ஆகியோருக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘காங்கிரஸ் சார்பில் முதன் முறையாக போட்டியிட்ட 38 பேரை எம்எல்ஏக்களாக மக்கள் தேர்வு செய்துள்ளார்கள் என்பதை தங்களுக்கு மீண்டும் நினைவு படுத்துகிறோம். ஆனால், முதல் முறையாக எம்எல்ஏவான ஒருவருக்கு கூட அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே அமைச்சரவை புனரமைப்பின் போது முதல் முறை எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இந்த மாற்றம் தற்போது காங்கிரஸ் கட்சியில் அவசியம் தேவைப்படுகிறது.

முதன் முறை எம்எல்ஏக்களுக்கு நிர்வாக பொறுப்புகளை கட்சி மேலிடம் வழங்க வேண்டும். அமைச்சரவை புனரமைப்பின் போது குறைந்தபட்சம் 5 முறை எம்எல்ஏக்கள் ஆனவர்களுக்காவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பல மாநிலங்களில் முதல் முறை எம்எல்ஏ ஆனவர்கள் அமைச்சர்களாகவும், முதல்வர்களாகவும் கூட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே அமைச்சரவையில் இளைஞர்கள், அனுபவசாலிகள் கலந்து சமவிகிதத்தில் இருந்தால் மட்டுமே 2028ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் அதிகாரத்துக்கு வர முடியும். ’ என அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

 

Related Stories: