நீட்-பிஜி கட்-ஆப் மதிப்பெண் குறைப்பால் மருத்துவ கல்வியின் தரம் பாதிப்பா? ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு

 

புதுடெல்லி: நடப்பு கல்வியாண்டிற்கான சதவீத கட்-ஆப் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்ம மற்றும் நீதிபதி அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு கூறும்போது,’ கல்வியின் தரத்தை மோசமாகப் பாதிப்பது என்பது எதையும் விட நாங்கள் கவலைப்படுகிறோம். இது தரத்தைப் பற்றியது. கட்-ஆப் இவ்வளவு கடுமையாகக் குறைப்பது.

கல்வியின் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.இந்த பிரச்சினையை நாம் சிந்திக்க வேண்டும்’ என்றனர். ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, காலியிடங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. நீட்-பிஜி எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வில் சேருவதற்கான நுழைவு அல்ல. தேர்வர்கள் ஏற்கனவே மருத்துவர்கள்’ என்றார்.

 

Related Stories: