நலத்திட்டங்களை நிறுத்த ஒன்றிய அரசு சூழ்ச்சி முதல்வர் முறியடிப்பார்: அமைச்சர் கீதாஜீவன் சவால்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலை மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் ஓடி, ஓடி உழைத்து வருகிறார்.

மக்களுக்கு வழங்கும் நலத்திட்ட உதவிகளை நிறுத்த வேண்டும் என்று பாஜவை சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது தெரிந்து தமிழக முதல்வர் சாணக்கியத்தனமாக மகளிர் உரிமைத் தொகை கணக்கில் ரூ.5 ஆயிரம் வரவு வைத்தார். நலத்திட்டங்களை நிறுத்த ஒன்றிய அரசு என்ன சூழ்ச்சி செய்தாலும் அதனை முதல்வர் மு.க ஸ்டாலின் முறியடிப்பார்’ என்றார்.

Related Stories: