அதிமுகவுக்கு சவக்குழி செல்லூர் ராஜூ வருத்தம்

மதுரையில் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது செல்லூர் ராஜூவிடம், ‘ஓபிஎஸ், ஐயப்பன் போன்றோர் திமுகவை பாராட்டியுள்ளனரே? உங்கள் கருத்து’ என கேட்டதற்கு, அவர்கள் அதிமுகவிலிருந்து சென்று விட்டனர். பேசாமல் ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்து விடலாம். கட்சிக்கு ஏற்பட்டுள்ள சோதனையான நேரத்தில், குரல் கொடுக்காமல் இப்படி பேசி வருவது மனவருத்தமாக இருக்கிறது.

இப்போது ஓபிஎஸ் செய்வதுதான் செஞ்சோற்று கடனா? அதிமுக வேட்டியோடுதான் தங்கள் சவ ஊர்வலம் போகணும்னு சொன்னாங்க. இப்போ கட்சிக்கு சவக்குழி தோண்டுறாங்க. நாங்கள் எப்படி பொறுத்துக் கொண்டு இருப்பது? பதவி சுகம் கண்டு, குடும்பம், சுகம் வளர்த்து, முடிவில் கட்சியை காட்டிக் கொடுத்து விட்டு போகும் யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிப்போம் என்றார்.

Related Stories: