விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா சட்டமன்றத்தில் ஆற்றிய கடைசி உரையில் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். எனக்கு பின்னாலும் அதிமுக 100 ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்று சூளுரைத்தார். அதிமுகவிற்கு எதிராக பேசும் சுயநலவாதிகளுக்கு தமிழக அரசியல் வரலாறு பதில் சொல்லும். சுயநலவாதிகளுக்கு தமிழ்நாடு மக்கள் பதில் சொல்வார்கள். விஜய் கட்சி பரிதாபமான நிலையில் உள்ளது.
அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. களத்தில் திமுகவும், அதிமுகவும் மட்டுமே உள்ளது. தவெக அருண்ராஜ் ஒரு லூசு பயங்க. ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது என்று சொல்றான். அக்கட்சியினர் லூசுத்தனமாகத்தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒரு நாள் கூத்துக்கு தவெக தாங்காது. இந்த தேர்தலோடு அந்த கட்சி முடிந்து விடும். களத்தில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மட்டுமே போட்டி இருக்கும். விருதுநகர் எம்பி தொகுதியில் தனியாக நின்று 27 ஆயிரம் ஓட்டு வாங்கிய மாணிக்கம் தாகூருக்கெல்லாம் அதிமுக பதில் சொல்லாது. காங்கிரஸ் கட்சியினர் வேடிக்கை பொருட்களாக உள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.
