திமுக கூட்டணிக்கு அனைவரும் வருக தமிழகம் வெல்க: கமல் அழைப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மதுரையில் நேற்று மாலை நடந்த ‘மறவோம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கூட்டணி பேச்சுவார்த்தை என்பது எனக்கு கிடையாது. எனக்கு கடமை உள்ளது. பேச்சுவார்த்தையெல்லாம் எனக்காக அவர்கள் பண்ணுவார்கள். எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது. நெகோஷியேஷன் அவர்கள் எனக்காக செய்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எத்தனை தொகுதிகளில் நிற்போம் என்பதையெல்லாம் உங்களிடம் சொல்லமுடியாது. எப்படியும் நாங்கள் வெளியிடுவோம். கூட்டணியில் முக்கியமான விஷயம், ஒற்றுமையும் நோக்கமும் தான். அது எங்களுக்கு தெளிவாக உள்ளது. அதனால் நாங்கள் அதை நோக்கி நகர்கிறோம்’’ என்றார். அவரிடம், ‘‘திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ் வருவதாக தகவல் உள்ளதே’’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘அனைவரும் வருக தமிழகம் வெல்க’’ என்றார்.

Related Stories: