புகையிலை பொருட்கள் வைத்திருந்த மூதாட்டி மீது வழக்கு

கடலூர், பிப். 18: கடலூர் துறைமுக காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார், காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, துறைமுகம் அக்கரை கோரி பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் சேகர் மனைவி விமலா(55) என்பவர், கடையில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து விமலா மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: